பாதுகாப்பு செயலாளராக மீண்டும் கோத்தபாய ராஜபக்ச?

Sunday, October 28th, 2018

நாட்டின் புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போதைய பாதுகாப்புச் செயலாளராக கபில வைத்தியரத்ன செயற்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பதவிக்கு கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்றைய தினம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


மக்களின் தேவைகளை அறிந்து செயல் வடிவம் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா - பிரபல சட்டத்தரணி றெமிடீயஸ்  !
ஆறு மாதங்களுக்குப் பின் பாடசாலைகள் இன்று மீள ஆரம்பம் - ஆசிரியர்களின் வருகையில் வீழ்ச்சி - மாணவர்கள்...
யாழ்ப்பாணத்தில் கைதான 20 இளைஞர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை - பிராந்திய சிரேஷ்ட பொலிஸ்...