“பாதுகாப்பான நாளை” – கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஆபத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றுவதற்கான விசேட கலந்துரையாடல்!

Thursday, December 14th, 2023

பாதுகாப்பான நாளை” எனும் தொனிப்பொருளில் போதைப்பொருள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றின் ஆபத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோனின் யோசனைக்கு அமைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார, தேசிய விஞ்ஞான அறக்கட்டளையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செபாலிகா நயனி சுதாசிங்க, உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாணசபைத் தேர்தல் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!
மக்களுக்கான நலன்திட்டங்களில் அரசியல் பேதங்கள் அவசியமற்றவை – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தல...
உத்தரவுகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டின் க...