“பாதுகாப்பான நாளை” – கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஆபத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றுவதற்கான விசேட கலந்துரையாடல்!

பாதுகாப்பான நாளை” எனும் தொனிப்பொருளில் போதைப்பொருள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றின் ஆபத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோனின் யோசனைக்கு அமைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார, தேசிய விஞ்ஞான அறக்கட்டளையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செபாலிகா நயனி சுதாசிங்க, உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாடுகடத்தப்பட்ட இலங்கையர் !
ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து மகிந்த தேசப்பிரிய!
யுக்ரைன் சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் – ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவிப்பு!
|
|