பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் தொடர்பில் தீர்வு காண குழு நியமனம்!
Friday, August 12th, 2016
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அமைச்சரவையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் தீர்வுகள் எட்டப்படுமென போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எஸ்.சோமவீர தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் தொழில் ஆணையாளர், பொலிஸார், திறைசேரி மற்றும் புகையிரத பொது முகாயமையாளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். புகையிரத கடவைக் காப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு இந்த குழுவின் ஊடாக தீர்வு வழங்குவதற்கு எண்ணியுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆரம்ப சுகாதார சேவையைப் பலப்படுத்தும் வேலைத்திட்டம்!
கொள்கலன்களைப் பரிசோதிக்கும் வளாகத்தை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய...
வலுக்கட்டாயமாக அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டதால் ஈராக் சிரியா லிபியா லெபனான் போன்ற நாடுகளின் நிலையே உர...
|
|
|


