பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நிதி இல்லை – விவசாய இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
Thursday, October 20th, 2022
சேதனைப்பசளைகளை பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திறைசேரி இன்னும் நிதியை விடுவிக்கவில்லை என்று விவசாய இராஜாங்க அமைச்சர் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
சேதன பசளை பாவனையினால் அறுவடை வீழ்ச்சியடைந்த விவசாயிகளுக்கு தேவையான நட்டஈட்டை வழங்குவதற்கு நிதியை திறைசேரிக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் நிதி திறைசேரியினால் இன்னும் விடுவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்
நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்ரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த பதிலை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கழிவுகளும் பொருளீட்டக் கூடிய சொத்துக்கள்- அமைச்சர் சம்பிக்க ரணவக்க!
முதலாம் தவணைப் பரீட்சைகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் !
மீண்டும் பரவு இடமளிக்க மாட்டோம் – கொரோனா தொடர்பில் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன!
|
|
|


