பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் 51 மில்லியன் ரூபா நிதியுதவி
Sunday, June 4th, 2017
இலங்கையில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 3 இலட்சம் யூரோக்களுக்கு மேற்பட்ட நிதியுதவியை வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை நாணயப் பெறுமதியில் 51 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனிதநேய உதவிகள் தொடர்பான ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான குடிநீர், தற்காலிகக் கொட்டில்கள் மற்றும் சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
Related posts:
இலங்கையில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!
நெருக்கடியான காலக்கட்டத்தில் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையாற்றும் ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் தமது ...
இந்திய முட்டைக்கு எதிராக உள்ளூர் உற்பத்தியாளர்கள் சதி - அரச வர்த்தக சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்...
|
|
|


