இலங்கையில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Wednesday, September 2nd, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 92ஆக அதிகரித்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 6 பேருக்கும் குவைட்டில் இருந்து வந்த இந்திய நாட்டவர் 05 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இந்த தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 879 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் இந்த தொற்றுக்கு உள்ளான  201 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 54 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: