பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் உதவிகள்!

Tuesday, May 30th, 2017

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு நிவாரணப் பொருட்களைத் தாங்கிய இந்தியாவின் மூன்றாவது கப்பலும் இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்புத்துறைமுகத்திற்கு வந்தடைந்த நிவாரணப்பொருட்களை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரவி கருணாநாயக்க பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த சனிக்கிழமை இந்தியாவின் மருத்துவக்குழு மற்றும் நிவாரணப் பொருட்கள் அடங்கியமுதலாவது கப்பல் கொழும்பு துறைமுகத்தை வ்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பாகிஸ்தானின் நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பலொன்றும் இன்றைய தினம் கொமும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதனிடையே சீனாவின் நிவாரணப் பொருட்களடங்கிய மூன்று கப்பல்கள் எதிர்வரும்வியாழக்கிழமை கொழும்பை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டுசிங்கப்பூர் அரசு ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை அனர்த்த நிவாரண உதவியாக வழங்கமுன்வந்துள்ள நிலையில்ரூபவ் இஸ்ரேல் அரசாங்கமும் நிவாரண உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அமெரிக்காரூபவ் ஜப்பான்ரூபவ் அவுஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts: