பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் – எச்சரிக்கை வெளியிடுகின்றது யாழ்; மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம்!

யாழ்ப்பாணத்தில் பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ்; மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த சங்கத்தின் செயலர் கா.பாஸ்கரன் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய நிலையில் இறக்குமதி செய்யப்படும் மாவின் விலை அதிகரித்துள்ளதுடன் பாண் உற்பத்திக்குத் தேவையான உப மூலப் பொருள்கள் அனைத்தின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாண் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று யாழ்ப்பாண மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன, என்று அச்சங்கத்தின் செயலர் கா.பாஸ்கரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்றி செய்த கொள்ளையர்கள் உள்ளிட்ட மூவர் பலாலி பொலிஸாரால் கைது!
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச - ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் இடையே விசேட சந்திப்பு - இரு நாடுகளுக்கும்...
நிறைவடைந்தது வேட்பு மனுத் தாக்கல் - சஜித் விலகல் - மும்முனைப் போருக்கு தயாராகும் இலங்கை - புதிய ஜனா...
|
|