தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, January 26th, 2021

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொழில் உறவுகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தினூடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளம் 1,000 ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயற்படுத்தும் வகையில் தோட்டத் தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை

இந்நிலையிலேயே நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


தீர்வு கிடைக்காத நிலையில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்...
நாட்டில் புதிய கொவிட் கொத்தணிகள் உருவாகும் அபாயம் - தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் சுதத் ...
இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் யாசகம் பெறுகின்றனர் - பேராதனை பல்கலைக்கழகத்தின் பேரா...