பாடசாலை செல்லாத சிறுவர்கள் தொடர்பில் கட்டமைப்பொன்று அவசியம் – அரசாங்க கணக்குகள் பற்றிய குழு வலியுறுத்து!

Thursday, July 6th, 2023

பாடசாலை செல்லாத சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தொடர்பான தகவல் கட்டமைப்பொன்றை பேணுமாறு சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்திற்கு கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அறிவுறுத்தியுள்ளது.

2019, 2020, 2021 ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் கோபா குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது, குறித்த தகவல்களை கல்வி அமைச்சுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை பாடசாலைகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அந்த குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் பிரதேச மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை சிறுவர்கள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பொதுவிடங்களில் காணப்பட்ட பார்த்தீனியக் களைகள் முற்றாக இல்லாதொ...
நுளம்புகள் பெருகும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - உபுல் ரோஹன அறிவிப்பு!
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யா, வடகொ...