பாடசாலை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை காணப்படுமாக இருந்தால் அதற்கான அனுமதி வழங்கப்படும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Wednesday, September 8th, 2021

நாட்டில் பாடசாலை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை காணப்படுமாக இருந்தால் அதற்கான அனுமதியை வழங்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இருந்தபோதும் அவ்வாறான சூழ்நிலை தற்போது கிடையாது என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது, கல்வி அதிகாரிகளின் பொறுப்பு. அந்த சூழ்நிலையை உருவாக்க அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

அவ்வாறான சூழ்நிலையை உருவாக்கி அதனை கல்வி அதிகாரிகள் எம்மிடம் உறுதிப்படுத்தினால் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்க முடியும்.

அதுநேரம் சுகாதார அமைச்சினால் அந்த சூழ்நிலையை ஏற்படுத்த முடியாது. நோயாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதே சுகாதார அமைச்சின் பொறுப்பு.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் கோவிட் பரவலை தடுப்பதற்கும், மாணவர்களின் ஊடாக வீட்டிலுள்ளவர்களுக்கு கோவிட் பரவுவதை தடுப்பதற்குமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: