ரஷ்யா – பெலாரஸ் நாடுகளில் உள்ள அரச உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, October 21st, 2022

ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் உள்ள அரச உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்புவதற்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது புலமைப்பரிசில்களை அதிகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வந்ததாகவும் அமைச்சர் கூறினார்.

இதன்படி, எதிர்காலத்தில் நாட்டில் இருந்து புலமைப்பரிசிலில் வெற்றி பெற்றவர்கள் உயர் கல்விக்காக ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உயர்தர பரீட்சையின் Z பெறுமதியின் அடிப்படையில் புலமைப்பரிசில் பெறுவோர் தெரிவு செய்யப்படுவர் எனவும், அதற்காக வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: