மத்திய தபால் பரிமாற்ற சேவை மீண்டும் பணியை ஆரம்பித்தது – தபால்மா அதிபர் தெரிவிப்பு!

Monday, November 9th, 2020

இலங்கை மத்திய தபால் பரிமாறல் கடமைகள் சில மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது –

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நிலைமையிலும் குறைந்தபட்ச பணியாளர்களை பயன்படுத்தி மத்திய தபால் பரிமாறல் கடமைகள்மேற்கொள்ளப்பட்ட போதிலும், இவ்வாறு பணியாற்றியவர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படத்திய போது மூவர் தொற்றுக்குள்ளானதாக பதிவானதையடுத்து இந்த அலுவல்களை முழுமையாக இடைநிறுத்துவதற்கு கடந்த 05 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஊரடங்கு சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்படுவதை தொடர்ந்து கிருமி நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட மத்திய தபால் பரிமாறல் வரையறுக்கப்பட்ட கடமைகள் சிலவற்றுக்காக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: