ஜனாதிபதியின் தீர்மானம் பிற்போடப்பட்டது!

Wednesday, October 25th, 2017

சர்ச்சைக்கரிய மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சைட்டம் மருத்துவக் கல்லூரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்களும், மருத்துவத்துறையினரும் நீண்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மறுபுறத்தில் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்கள் பலரும் சைட்டம் மருத்துக் கல்லூரிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர்.இதன் காரணமாக சைட்டம் தொடர்பாக தீர்மானமொன்றை மேற்கொள்வதில் அரசாங்கத்துக்கு பெரும் சிக்கல் நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சைட்டம் கல்லூரி மருத்துவக் கல்லூரி தொடர்பாக ஜனாதிபதியின் தீர்மானத்தை இருதரப்பும் நாடியிருந்தனர்.அது தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானம் நேற்று(23) வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும், குறித்த தீர்மானத்தை இன்னும் இரண்டு நாட்கள் கழித்தே வெளியிடவுள்ளதாக தற்போது ஜனாதிபதி அறிவித்துள்ளார்

Related posts:

விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும் இதுவரை எவரும் விண்ணப்பிக்கவில்லை! துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பா...
பயணத்தடையை அனுசரித்து பொதுமக்கள் வீடுகளில் இருப்பதே சிறந்தது – யாழ் மாவட்ட கொரோனா நிலைமை குறித்து செ...
கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் - விமண்டலவியல் திணைக்களம் எச...

வடக்கில் கொரோனா பரவாதிருக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ம...
வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்றுமுதல் சட்ட நடவடிக்கை - பொலிஸ் போக்குவரத்து தல...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது எமக்கு பூரண நம்பிக்கை - கூட்டமைப்பு எம்.பி சித்தார்த்தன் கருத்து!