பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தை மாற்றுமாறு கல்வியமைச்சிடம் கோரிக்கை!

Tuesday, January 10th, 2017

நாடளாவிய ரீதியில் நிலவும் அசாதாரண காலநிலையை கருதிற் கொண்டு பாடசாலைகளை காலை வேளைகளில் ஆரம்பிக்கு; நேரத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவது பற்றி கல்வியமைச்சு சாதகமாக பரிசீலிக்க வேண்டுமென கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கொரிக்கையை இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விடுத்துள்ளது.

இத தொடர்பாக கல்வி அமைச்சிடம் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

நாடளாவிய ரீதியில் தற்போது மிகவும் குளிரான கால நிலை நிலவுகிறது. குளிர் காலநிலை காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. பாடசாலை மாணவர்கள் முதல் அரச ஊழியர்கள் வரை நேரகாலத்துக்கு தமது கடமைகளுக்கு செல்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மகம் கொடுத்த வருகின்றன. தற்பொதைய குளிரான காலநிலை காலை 8.30 மணிக்கு பின்னரே மாலை 4 மணியானதும் மீண்டும் குளிர்கால நிலையே ஏற்படுவதுடன் சளி, காய்ச்சல் என்பன ஏற்படுகின்றன. பாடசாலை மாணவர்கள் குறிப்பாக ஆரம்ப வகுப்பு மாணவர்கள் அதிகாலை வேளையில் நித்திரை விட்டெழுப்பி காலை 7.30 மணிக்கு பாடசாலை செல்வதில் பல்வேறு  அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. எனவே காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப பாடசாலைகள் தொடங்கும் நேரத்தையும் முடியும் நேரத்தையும் மாற்றியமைக்குமாறும் இவ்வாறு உலக நாடுகளில் காலநிலைக்கு ஏற்றவாறு மாற்றப்படுவதாகவும் மேற்படி சங்க செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

sheet of a calendar with the number of days and clock close-up

sheet of a calendar with the number of days and clock close-up
sheet of a calendar with the number of days and clock close-up

Related posts: