அரசின் அறிவிப்பு அமுலானது!

Monday, February 5th, 2018

பொலித்தீன் பாவனையை நாடு முழுவதும் தடை செய்யும் முயற்சியின் அடுத்த கட்டமாக பொது இடங்களில் பொலித்தீன் பாவனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பூங்காக்கள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் உலக மரபுரிமை இடங்கள் ஆகியனவற்றில் பொலித்தீன் தடை செய்யப்படுவதாக அரசாங்கம்அறிவித்துள்ளது.

இந்தத் தடை சுதந்திர தினத்திலிருந்து அமுலுக்கு வருவதாக வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் அறிக்கையொன்றைவெளியிட்டுள்ளது.

மேலும் பொலித்தீன் பாவனையை பொது இடங்களில் தவிர்க்கும்படி மக்களிடமும் அதனை ஊக்குவிக்கும் எந்தவித நடவடிக்கைகளையும்முன்னெடுக்கவேண்டாம் என வர்த்தகர்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தடையை மீறும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம்குறிப்பிட்டுள்ளது.

Related posts: