பாடசாலைகளை சுத்தப்படுத்தவும் – கல்வி அமைச்சு!
Sunday, April 23rd, 2017
இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படுவதற்கு முன்னர், பாடசாலைகளில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான காரணிகளை முற்றாக அழித்தொழித்து, சுற்றுச்சூழலை, நன்றாக சுத்தப்படுத்துமாறு, அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும், கல்வியமைச்சு, அறிவித்துள்ளது.
பாடசாலைகளை சுத்தப்படுத்துவதற்காக, பெற்றோர், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் அங்கத்தவர்கள் போன்றவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க பாடசாலைகளும், எதிர்வரும் புதன்கிழமை (26) ஆரம்பிக்கப்படவுள்ளது. முஸ்லிம் பாடசாலைகள், கடந்த 19ஆம் திகதி, இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் வருட இறுதியில் தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ...
பாக்குநீரிணையை இரு முறை நீந்திக் கடந்து சாதனை படைத்த இலங்கை விமானப் படைவீரர்!
சமையல் எரிவாயுவுக்கு காத்திருக்கும் மக்கள் குறித்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் போர்ட் சிட்டியை பா...
|
|
|


