வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் வருட இறுதியில் தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Wednesday, February 24th, 2021

வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்குவது குறித்து இவ்வாண்டு இறுதியில்  பரிசீலிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இராஜாங்க அமைச்சர் இவ்வாது தெரிவித்துள்ளார்.

அத்துடன் வாகனங்களின் இறக்குமதி அந்நிய செலாவணி வீதங்களின் ஸ்திரத்தன்மைக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடை எதிர்காலத்தில் நாணய மாற்று விகிதத்தின் ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் இதன்போது அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: