பல்வேறு நாடுகளின் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் நிதி அமைச்ர் பசில் ராஜபக்ச கலந்துரையாடல்!
Wednesday, July 28th, 2021
மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவைச் சேர்ந்த பல நாடுகளின் தூதர்கள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு அண்மையில் நிதி அமைச்சகத்தில் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்புகளின்போது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் சவுதி அரேபியா, எகிப்து மற்றும் குவைத் நாடுகளின் தூதர்களே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
இதன்போது இலங்கைக்கும் குறித்த நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, பரஸ்பர ஒத்துழைப்பில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் நீண்ட விவாதங்கள் நடைபெற்றுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் உள்ள நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்த இலங்கை தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் பிரித்தானியா, அமெரிக்கா சீனா இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகளையும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


