இ.போ.ச. ஊழியர்கள் வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!
Saturday, February 4th, 2017
வவுனியா மத்திய பஸ் நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதன் ஒரு பகுதியாக வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் இன்று காலை 11.00மணி தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உரிய தீர்வு கிடைக்கவிடில் தற்போது வடமாகாண ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள. எமது பணிப்பகிஷ்கரிப்பு இலங்கை முழுவதுமான பணிப்பகிஷ்கரிப்பாக மாற்றமடையும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச. வவுனியா சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.




Related posts:
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள பைஸர் நிறுவனத்துடன் உடன்படிக்கை!
யாழ் குடாநாட்டில் ஓய்வூதியக் கொடுப்பனவு பெறுவோருக்கு இராணுவத்தினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடு – யா...
நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்ல வேண்டும் - யாழ்ப்பாண பொலிஸார் விசேட அறிவிப்பு...
|
|
|


