தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி இருப்பது குழந்தைகள் கிட்டப்பார்வை கொண்டவர்களாக இருக்க முக்கிய காரணம் – வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டு!

Monday, April 1st, 2024

அதிக நேரம் வீட்டுக்குள்ளேயே செலவிடுவதும், தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி இருப்பதும் இன்று அதிகமான குழந்தைகள் கிட்டப்பார்வை கொண்டவர்களாக இருக்க முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒருவரின் கண் பார்வை மிக நீளமாக இருக்கும்போது அல்லது கார்னியா மிகவும் வளைந்திருக்கும் போது கிட்டப்பார்வை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பார்வை குறைப்பாடுகள் ஏற்படும்பொழுது கண்ணாடியை வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் உள்ளிட்ட பெரியவர்கள் மூக்குக் கண்ணாடி அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர்.  தற்போது லென்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

எவ்வாறாயினும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பார்வை கோளாறுகள் அனைத்து விடயங்களிலும் சவாலாக மாறும் என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: