கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக இருக்கின்ற போதும் அதன் வீழ்ச்சி வேகம் மிகக் குறைவு – உலக சுகாதார ஸ்தாபனம்!

Wednesday, April 15th, 2020

கொரோனா கட்டுப்படுத்தல் தொடர்டபில் சரியான பொது சுகாதார நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர், படிப்படியாக தற்போதுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோய் அதானொம் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் குறித்த நோய் தொற்றுக்குள்ளான நபர்களை அடையாளம் கண்டு அவர்களை சிகிச்சைக்கு உட்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் சிறப்பான முறைமைகள் அவசியம் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று அதிகளவில் பரவிய போதிலும், அதன் வீழ்ச்சி வேகம் மிகக் குறைவாகவே இருக்கிறது. எனவே தற்போது நாடுகளில் அமுலில் இருக்கின்ற கட்டுப்பாட்டு முறைமைகள், படிப்படியாக மெதுவாக குறைக்கப்பட வேண்டுமே தவர, முழுமையாக நீக்கப்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: