ஜனாதிபதி தேர்தல் குறித்து மஹிந்த தேசப்பிரிய!

Friday, November 1st, 2019

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் வாக்குகளை இடும் வாக்கு பெட்டிகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று விளக்கமளித்துள்ளார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இது குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

நாம் பாவிக்கும் பலகைகளிலான வாக்குப்பெட்டியில் சாதாரணமாக 415 வாக்களிப்பு பத்திரங்களை மாத்திரமே இட முடியும் இலங்கையில் 400 க்கும் குறைந்த வாக்களிப்பு நிலையங்கள் 350 மாத்திரமே உள்ளன. அதிலும் கிட்டத்தட்ட 12,600 க்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்கள் 350 மாத்திரமே உள்ளன. அப்படியானால் மேலதிக வாக்குகளை இடுவதற்காக இரண்டு மேலதிக பெட்டிகளை கொண்டு செல்ல வேண்டும்.

உதவியாளர்கள் 1200 வாக்குகளுக்கு மூவர், 1600 வாக்குகளுக்கு நால்வர், 2000 என்றால் ஐவர், 2400 க்கு ஆறு பேர், அதற்கும் மேல் எழாகும். எம்மிடம் 2,800 வாக்களிப்பு நிலையங்கள் மாத்திரமே உள்ளன.

எனவே வெளிநாடுகளில் உள்ள சிறப்பு பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகளை கொள்வனவு செய்வதாயின் அதற்கு 6000 முதல் 8000 ரூபா வரை செலவாகும். அதற்கமைய 12,000 பெட்டிகளை கொள்வனவு செய்வதாயின் அதற்காக 3,05,000 ரூபா செலவாகும்.

இதனை இலங்கையில், நன்கு அறியப்பட்ட நான்கு நிறுவனங்கள் பிளாஸ்டிக் பெட்டிகளைக் கொண்டுவந்து பரீட்சிக்க முயற்சித்தன ஆனால் அவற்றின் விலை .2,500 முதல் 3,000 ரூபா வரை செலவாகும்.

அப்படியானால் இரண்டாயிரம் முதல் நான்காயிரம் வரை வாக்குகளை இட கூடிய பெட்டியை கொள்வனவு செய்வதற்காக 6,000 இலங்கை ரூபா செலவாகும். அதனை கருத்திற்கொண்டே நீர்போகாத அட்டை பெட்டிகளைப் பயன்படுத்த முடிவு செய்தோம்.

யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் அதிகூடிய 400 முதல் 800 வரையான வாக்களிப்பு நிலையங்கள் உள்ளன.

அவர்களும் அதே வாக்களிப்பு பெட்டிகளையே பயன்படுத்துகின்றனர்.இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட 3,000 பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் உள்ளன அவற்றையும் இந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்ப தீர்மானித்துள்ளோம்.

800 முதல் 1600 வரை வாக்குகள் பதிவாகும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அட்டை பெட்டிகளை அனுப்ப உள்ளோம். அதேபோல் 1600 க்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகக்கூடிய நிலையங்களுக்கும் அட்டை பெட்டிகளையே பயன்படுத்தவுள்ளோம்.

Related posts: