பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இந்த ஆண்டிற்கான முதல் அமைச்சரவை கூட்டம் நாளை!
Sunday, January 2nd, 2022
மிக முக்கியமான ஓர் அமைச்சரவைக் கூட்டம் நாளையதினம் நடைபெறவுள்ளது. அத்துடன் குறித்த அமைச்சரவைக் கூட்டம் இந்த ஆண்டில் நடைபெறவுள்ள முதல் அமைச்சரவைக் கூட்டமாகவும் அமையவுள்ளது.
இறுதியாக கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது நாட்டின் பொருளாதார நிலைமைக்கள் குறித்து ஆராய்வதற்காக மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலையும், திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவையும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தகவலறியும் உரிமை சட்டமூலம் நிறைவேற்றம்!
புத்தாண்டுக்கான ஒற்றுமை வலுப்படுத்தி இலங்கை வந்தடைந்த 'ரன்விஜய்' கப்பல்!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – நட்டஈட்டைப் பெற சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு - அம...
|
|
|


