பல்வேறு உள்நாட்டு, பன்நாட்டு நிறுவனங்களுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை மீள மறுசீரமைக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்!
Sunday, February 18th, 2024
சர்வதேச நாடுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு உள்நாட்டு, பன்நாட்டு நிறுவனங்களுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை மீள மறுசீரமைக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்காக பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
குறிப்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களை மறுசீரமைப்பது குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும்.
இது குறித்து கருத்து வெளியிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்,
இதற்கிணங்க 1000 இற்கும் அதிகமான ஒப்பந்தங்களை மறுசீரமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் போது அதற்கான பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுற்றுநிரூபம் ஒன்றுள்ளது.
அதனை உரிய வகையில் பின்பற்றாது செய்துக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.” எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


