பல்கலைக்கழக மாணவர் வெற்றிடங்கள் இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தி!

Saturday, October 29th, 2016
புதிய கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் வெற்றிடங்கள் அனைத்தும் இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்படவிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் முதல் சுற்று நடவடிக்கை பூர்த்தி அடைந்துள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வெற்றிடங்கள் அனைத்தும் இரண்டு வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்படவிருக்கின்றன. வெற்றிடங்களுக்காக தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு சட்டபூர்வமாக அதுபற்றி அறிவிக்கப்படவுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களின் இறுதிப் பட்டியல் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னரே தயாரிக்கப்படும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மருத்துவம், பொறியியல் ஆகிய பீடங்களுக்கான கல்விசார் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டுக்காக 14 பல்கலைக்கழகங்களுக்கும், மூன்று வளாகங்களுக்கும், ஐந்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் 97 பாடநெறிகளை தொடர்வதற்காக மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். புதிய கல்வியாண்டுக்கு 26 ஆயிரத்து 541 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

58d202aaaa2189ef38d9ee41e6c06249_L

Related posts: