பல்கலைக்கழகங்கள் மீளத் திறப்பது மீண்டும் ஒத்திவைப்பு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
 Tuesday, May 5th, 2020
        
                    Tuesday, May 5th, 2020
            
பல்கலைக்கழகங்களின் கற்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது மீண்டும் ஒத்திவைக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளையடுத்து பல்கலைக்கழக நடவடிக்கைகள் யாவும் கடந்த மார்ச் 13ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.
இந்நிலையில் பல்கலைக்கழகங்களின் கற்கை நடவடிக்கைகள் வரும் 11ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது. எனினும் சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி பாதுகாப்பான சூழல் ஏற்படும்வரை பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடியாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணையக்குழு இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் நியமன முறைகேட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவு!
நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக ஏ9 வீதியில் விபத்து - கணவன் உயிரிழப்பு – மனைவி படுகாயம்!
அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் பாதுகாப்பு தொடர...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        