பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க தீர்மானம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
 Saturday, September 18th, 2021
        
                    Saturday, September 18th, 2021
            
பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல்கலைக்கழகங்களை விரைவில் மீண்டும் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களைத் துரிதமாகத் திறப்பது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடும்போதே அதன் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்காக சுகாதாரத் துறையுடன் இணைந்து விரைவான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் பல்கலைக்கழகங்களில் 30 வயதிற்குட்பட்ட ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றத்திற்கான கண்காணிப்பு அமைப்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு, சுகாதாரத்துறை துணைவேந்தர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        