பலஸ்தீனுடனான நட்புறவுக் கொள்கையில் எந்தவகையிலும் மாற்றமேற்படாது – வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அறிவிப்பு!

பலஸ்தீனும் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நட்புறவுக்கொள்கை எந்தவகையிலும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேநேரம் சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புகளை மேம்படுத்தி உறவுகளை வலுவூட்டுவது அரசாங்கத்தின் இலக்காகும்.
அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் பலஸ்தீன வீதி பெயரிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், இலங்கையில் பலஸ்தீனத்தின் உயர்ஸ்தானிகராலயம் அமைக்கப்பட்டுள்ளமை இதன் வழியிலேயேயாகும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
இலங்கையுடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரி...
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை - 53,000 கல்வியமைச்சர் சுசி...
யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடி விசேட சுற்றிவளைப்பு - பிராந்தி...
|
|