நுகர்வோரை பாதுகாப்பதற்காகவே அவசரகால விதிகள் அமுல்படுத்தப்பட்டது – நீதி அமைச்சர் விளக்கம் !

Saturday, September 11th, 2021

கொரோனா தொற்று தற்போது மாற்றங்களுடன் இலங்கையை மாத்திரமின்றி உலக நாடுகளையும் பாதித்துவருகிறது.

விசேடமாக டெல்டா என்ற திரிபு தற்போது இலங்கையில் தொற்றாளர்கள் மத்தியில் 195.8 வீதமாக காணப்படுகிறது. இந்தியா வியட்நாம். இந்தோனேசியா ,பிரிட்டன் ,நேபாளம் ,அமெரிக்கா போன்ற நாடுகளில் இது தற்போது வேகமாக பரவிவருவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் நமது நாடு நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளது.நாட்டின் வருமானத்திலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ,இந்நிலையில் சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரிசி சீனி மா போன்ற பொருட்களுக்கு இயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொது மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றனர்.

இதனால் பொருட்கள் பதுக்கப்படுவதை தடுப்பதற்காக பொது மக்கள் பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக அவசரகால விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன என்றும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொது மக்களுக்கான பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்வதற்காவும் மக்களின் நலனைக்கருத்திற்கொண்டு ஜனாதிபியினால் அவசர கால விதிகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் மற்றும் பதுக்கலை தடுப்பதற்கு நுகவோர் பாதுகாப்புச் சட்டம் நாட்டில் உண்டு. இந்நிலையில் அவசரகால விதிமுறை;களை அமுலாக்கும் தேவை ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொருட்களை பதுக்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை அதாவது இவ்வாறு பதுக்கலில் ஈடுபடுவோரை நீதி மன்றத்தில் ஆஜார் படுத்துவதன் மூலம் நீதி மன்றம் தண்டனையாக தண்டப்பணம் விதிக்க முடியும்.

ஆனால் பதுக்கப்பட்ட பொருட்களை அதாவது சீனி மா போன்றவற்றை அரசுடமையாக்கி பொது மக்களுக்கு விநியோகிக்கும் அதிகாரம் நுகர்வோர் பாகாப்புச் சட்டத்தில் கிடையாது என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரங்கு குறித்து குறிப்பிடுகையில் ஊரடங்குச்சட்டம் ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது.

1977 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி இதனை அமுல்படுத்தினார். ஆனால் நாம் இதனை செய்யவில்லை. தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்பது தொற்று பரவுவதை தடுப்பதற்காக குறிப்பிட்ட பகுதியை தனிமைப்படுத்தும் அதிகாரம் சுகாதார பணப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்படுகிறது.

நோய் பரவுவதை தடுப்பதற்கு இது பெரு உதவியாக அமைகிறது என்றும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: