பர்பெசுவல் ட்ரஷரீஸ் சட்டத்தரணி விலகினார்!

Friday, September 8th, 2017

மத்திய வங்கி பிணைமுறி மோசடிச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர் விசாரணைகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளின் போது குற்றம் சாட்டப்பட்டுள்ள பர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் சார்பில் சட்டத்தரணியொருவர் விசாரணைகளின் போது ஆஜராக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற விசாரணைகளின் போது நிறுவனத்தின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் சில்வா பர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜராகியிருந்தார்.

எனினும் குறித்த நிறுவனம் சில தகவல்களை தன்னிடம் இருந்து மறைத்துள்ளதாக தெரிவித்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.பர்பெசுவல் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த நிலையில் சட்டத்தரணி நிஹால் சில்வா இதனை அறிவித்துள்ளார்.

நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து தாம் விலகிக் கொள்ளவுள்ளதாக அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்

Related posts: