பருத்தித்துறை – கச்சாய் பிரதான வீதியில் தாழிறங்கியது பாலம் – பயணிகள் அச்சம்!

பருத்தித்துறை புலோலி, கொடிகாமம் கச்சாய் பிரதான வீதியில் உள்ள பாலம் தாழிறங்கியுள்ளதால் பயணிகளை அவதானமாக பயணிக்குமாறி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதி புதிதாக காபெட் இடப்பட்டு மாகா நிறுவனத்தினரால் வேலைகள் நிறைவு செய்து ஒரு வருடம் கூட கடக்காத நிலையில் பாலத்தின் ஒரு பகுதி தாழிறக்கம் ஏற்றபட்டுள்ளது.
இது ஒரு மாத்த்திற்குள் இரண்டாவது தடவையாக இவ் வீதி தாழிறங்கியுள்ளது.
வடமாரட்சி- தென்மராட்சி இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதியிலேயே தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் முன்தினம் தாழிறக்கம் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிகமான தடுப்பு நிலை மேற்கொள்ளப்பட்டு ஒரு வழியூடான போக்குவரத்து இடம்பெற்று வருகிறது.
எனவே இவ் வீதியை பயன்படுத்தும் பயணிகள் மிக அவதானமாக பணத்தை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர். இவ் வழியூடான பாரவூர்திகள் பயன்பாட்டை தற்காலிகமாக தடைசெய்ய வேண்டும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்
Related posts:
|
|