அம்பாறையில் கறுப்பு பூஞ்சை தொற்று தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – விசேட வைத்தியர் உபுல் பிரியதர்ஷன தெரிவிப்பு!

Monday, May 24th, 2021

இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள ‘கறுப்பு பூஞ்சை தொற்றுடைய ஒருவர் அம்பாறை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென அம்பாறை வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் தொடர்பான விசேட வைத்தியர் உபுல் பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

அத்துடன் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நபர் அத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர் இல்லை என்பது மேலதிக ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கொரோனா மற்றும் நீரிழிவு நோயாளர்கள் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படலாம் என நுண்ணுயிரியல் தொடர்பான நிபுணர் பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் இதுவரையில் 8 ஆயிரத்து 800 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னர் இந்தியாவில் சிலருக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டிருந்தது. எனினும் தற்போது அந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் கொவிட்-19 தொற்று உறுதியான பின்னர் குணமடைந்தவர்கள் என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: