ஊனமுற்ற இராணுவ வீரர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!

Thursday, November 3rd, 2016

சேவையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் தொடர்ச்சியாக போராடி வந்த நிலையில், தற்போது சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஓய்வூதியம் பெற நிர்ணயிக்கப்பட்ட கால எல்லையான 12 வருடங்களை பூர்த்தி செய்யாது இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் கடந்த 31ம் திகதி முதல் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

தமது கோரிக்கைகளுக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு வழங்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என, “இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு” குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பகல் முதல் அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அமைப்பின் தலைவர் பீ.வசந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

1-16

Related posts: