மாணவர் பாடசாலை செல்வது குறைவு: பெற்றோரின் கூடிய கவனம் தேவை – சிறுவர் தின நிகழ்வில் யாழ்.அரச அதிபர்!

Friday, November 18th, 2016

“பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவடைந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ் விடயத்தில் பெற்றோர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்” என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர், முதியோர், மாற்று வலுவுடையோர் தின விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.

யாழ்.மாவட்ட அரச அதிபர் இவ் வைபவத்தில் தொடர்ந்த உரையாற்றும் போது, “முதியோர்கள் எமது வாழ்வுக்கு வழிகாட்டியவர்கள். அவர்கள் எமது சமூகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். மாற்றுவலுவுள்ளோரையும் எமது சமூகத்தின் அங்கத்தவர்களாக மதித்து அவர்களின் வாழ்வு சிறக்க உதவ வேண்டும். பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவடைந்து செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. இவ்விடயத்தில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். பாசாலைகளில் பிள்ளைகள் கல்வியுடன் சேர்த்து நல்ல பண்பையும் வளர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது” என்றார்.

பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு யாழ்.அரச அதிபர் பரிசில்களை வழங்கினார்.

536

Related posts: