பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள் – உயர்தர மாணவர்களுக்கு கல்வியமைச்சு அறிவிப்பு!
Monday, October 19th, 2020
கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் அதனை அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பரீட்சைநிலையங்களின் சுகாதார குறைப்பாடுகள் தொடர்பில் 1988 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள உயர்தர மாணவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பாதிப்பை ஏற்படுத்தாது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப பரீட்சைகளில் கலந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


