பரீட்சை எழுதிவிட்டு திரும்பிய மூன்று மாணவர்கள் மீது கத்தி குத்து!
Saturday, August 13th, 2016
தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மூன்று மாணவர்கள் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
கண்டி அக்குரஸ்ஸ பேருந்து நிலையத்தில் வைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கத்தி குத்துக்கு இலக்கான மாணவர்கள் மூன்று பேரும் அக்குரஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொடபிட்டிய தேசிய பாடசாலை மாணவர்கள் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
தலைவர்களை பாதுகாப்பது மட்டும் பொலிஸாரின் கடமை இல்லை - ஜனாதிபதி!
புங்குடுதீவு மக்களின் நலன் கருதி வேலணை பிரதேச சபையால் இலவச குடிநீர் சேவை முன்னெடுப்பு!
யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் இன்னும் சீராகவில்லை : ஊரடங்குச் சட்டம் தொடரவேண்டும் - அரச மருத்துவ அதிகாரி...
|
|
|


