புங்குடுதீவு மக்களின் நலன் கருதி வேலணை பிரதேச சபையால் இலவச குடிநீர் சேவை முன்னெடுப்பு!

Saturday, April 11th, 2020

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புங்குடுதீவு உப அலுவலக பகுதியில் உள்ள மக்களின் அத்தியாவசிய தேவை கருதி வேலணை பிரதேச சபையால் இலவசமாக 16 ஆயிரம் லீற்றர் குடிநீர் இன்றையதினம் பகிர்ந்தளிக்கப்பாட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் ஆகியோரின் நெறிப்படுத்தலில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வழமையாக குறித்த பகுதி மக்களுக்கு சிறு நிதிபெற்று சபையினால் வழங்கப்பட்டுவரும் குடிநீர் தேவைக்கு மேலதிகமாக தற்போதைய கொரோனா தொற்றின் அவசரகால தேவைகள் மற்றும் வறட்சி நிலை கருதியதாகவே இந்த இலவச சேவையை வேலணை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது.

வேலணை பிரதேச சபையின் ஊழியர்களது பங்களிப்புடன் 16 ஆயிரம் லீட்டர் குடி நீரை சபையின் இரண்டு நீர்த்தாங்கிகள் மூலமாக குறித்த பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு உப அலுவலக பொறுப்பதிகாரியினால் குடிநீர்த் தேவைப்பாடுடைய இடங்கள் இனங்காணப்பட்டு சபைக்கு தெரிவிக்கப்பட்டமைக்கு அமைவாக சபையின் தவிசாளர் மற்றும் செயலாளரின் அனுமதியோடு இக்குடிநீர் விநியோக வழங்கல்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனிடையே வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் மற்றொரு பகுதியான நயினாதீவு உப அலுவலக பகுதியிலும் வழமையான குடிநீர் விநியோகம் கடும் வறட்சியின் மத்தியிலும் வேலணை பிரதேச சபையினால்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புங்குடுதீவு மற்றும் வேலணை பிரதேச சபையின் ஏனைய உப அலுவலக பகுதிகளில் குடிநீர் பெறுவதில் ஏதும் இடர்பாடு காணப்படின் அலுவலக நாட்களில் வேலணை பிரதேசசபையின் தொடர்பு இலக்காமான 0212211506 , 0212211505  ஆகிய இலக்கத்துடன் எனும் இலக்கமூடாக பொதுமக்கள்  தொடர்பு கொண்டு குடிநீர் பெறுவதில் உள்ள சிரமத்தினை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: