பரீட்சை அனுமதிப்பத்திரம் இதுவரை கிடைக்காத மாணவர்கள் அறிவியுங்கள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் இது வரை கிடைக்காத மாணவர்கள் மற்றும் அனுமதிப்பத்திரத்தில் ஏதாவது பிரச்சினைகள் இருப்பவர்கள் தாமதமின்றி அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவ்வாறு பிரச்சினைகள் இருப்பவர்கள் அது தொடர்பில் 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்கமுடியும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபர்களுக்கும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பரீட்சார்த்திகளின் தனிப்பட்ட முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் 4 இலட்சத்து 29 ஆயிரத்து 493 பாடசாலை பரீட்சார்த்திகளும் 2 இலட்சத்து 59 ஆயிரத்து 80 தனியார் பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பேர் தோற்றவுள்ளனர். கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|