பரிந்துரை கிடைக்க பெற்றவுடன் மரக்கறிகளுக்கான உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி – உர செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!
Tuesday, December 14th, 2021
பரிந்துரை கிடைக்க பெற்றவுடன் மரக்கறிகளுக்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என உர செயலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
தேவையான அளவு உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உர செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உரம் இன்மையால் மரக்கறி உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக கடும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
உரிய உற்பத்தி இன்மையால் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகரிப்பு - பொதுமக்கள் அவதானமாக செயற்பட ...
விவசாயத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் புளியங்குளத்தில் மிளகாய் உற்பத்தி - விவசாய அமைச்சு தகவ...
ஏற்றுமதி தொடர்பான தடைகளை நீக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்...
|
|
|


