பயணிகளுக்கு தடுப்பூசிக்கான சான்றிதழ் கட்டாயம் என தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் கட்டயாம் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்த நடைமுறை சாத்தியப்படலாம் ஆனால் தற்போது இந்த விடயம் சாத்தியமான விடயமல்ல என்றும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
பரபரப்பாக இயங்கும் குறித்த சேவையின்போது அனைவரிடமும் தடுப்பூசிக்கான சான்றிதழை பரிசோதனை செய்வது எனபது இயலாத காரியம் என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
இலண்டன் பயங்கரவாத தாக்குதல் - இலங்கை வைத்தியரக்கு பிரித்தானியா பாராட்டு!
சீனி விலையை கட்டுப்படுத்த விரையில் தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!
அனைத்து பாடசாலைகளையும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் திறப்பதற்கு நடவடிக்கை - எதிர்வரும் வெள்ளியன்று ...
|
|