பயணத் தடை நீக்கப்பட்டதன் பின்னரும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க அனுமதி – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னரும் சந்தர்ப்பம் வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்காக Online மூலம் விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் 18 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில அவர் மேலும் கூறுகையில் – நாளை நள்ளிரவுடன் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் காலம் நிறைவடைகின்றது.
பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலான ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே, Online ஊடாக விண்ணப்பிப்பதை நாளையுடன் நிறைவுக்கு கொண்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 65,ஆயிரம் விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இதுவரை விண்ணப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு, பயணக் கட்டுப்பாடு தளர்ப்பட்டதன் பின்னர் மேலும் சில நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக பேராசிரியர் சம்பது அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|