மாகாண மற்றும் கமநல சேவைகள் – கூட்டுறவு மொத்த விற்பனை என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானியூடாக அறிவிப்பு!

Thursday, June 3rd, 2021

நாட்டில் நிலவும் தற்போதைய கோவிட் நெருக்கடி நிலைமையில் – அரசாங்கத்தின் சேவைகள் தடங்கலற்று மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் பொருட்டு மாகாண மற்றும் கமநல சேவைகள், கூட்டுறவு மொத்த விற்பனை என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அதி விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்ரத்தானி அறிவித்தலின்படி, லங்கா சதொச, இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம்லங்கா சதொச, உணவு ஆணையாளர் திணைக்களம், லங்கா சதொச, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் சகல உணவு குடிபானப் பொருட்கள் உள்ளிட்ட பொது மக்களுக்கு தேவையான ஏனைய சகல நுகர்வுப் பொருட்களை வழங்குதல், களஞ்சியப்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், மாகாண சபைகளின் கீழுள்ள சகல அரச அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: