இன்றுமுதல் சுகாதார சட்டம் தொடர்பில் விசேட நடவடிக்கை – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு!

Monday, January 11th, 2021

சுகாதார சட்டம் தொடர்பில் விசேட நடவடிக்கை ஒன்றை இன்று தொடக்கம் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடக பேசசாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கை விசேடமாக மேல் மாகாணத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பு நகரின் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அதிகளவான மக்கள் நகரத்தை நோக்கி வரக்கூடும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அனைவரும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அவ்வாறு இல்லையென்றால் உப கொத்தணிகள் உருவாகக்கூடும் எனவும் பொலிஸ் ஊடக பேசசாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: