2 மாதங்களின் பின் மீண்டும் தொழிலை முன்னெடுக்கும் தமிழகை மீனவர்கள் – இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தக் கோரி இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளட்ட பலருக்கு கடிதம் எழுதினர் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள்!

Wednesday, June 15th, 2022

இரண்டு மாத கால மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, தமிழக மீனவர்கள் நேற்றுமுதல் மீன்பிடியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், வருடாந்தம் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூன் 14 வரையில், தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து, கடலூர் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

மீன்பிடி தடைக்காலத்தில், 49 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, நேற்றுமுதல் மீனவர்கள் மீளவும் கடலுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், இராமேஸ்வரம் இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் கோரிக்கைக் கடிதம் ஒன்றை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இன்று கையளித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதன் தலைவர் அன்னராசா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்துக்கது.

000

Related posts: