பல்வேறு அரச தரப்புக்களை சந்திக்க தயாராகும் இலங்’கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Monday, March 28th, 2022

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளார்.

மாலைத்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்ட அவர், பின்னர் அங்கிருந்து விமானத்தின் ஊடாக நேற்றிரவு 9.18க்கு இலங்கை வந்தடைந்துள்ளார்.

எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அவரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதுடன், இன்றையதினம்கொழும்பில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரின், இலங்கை பயணத்தின்போது இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்க்கும் முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளார்.

மேலும் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அண்மையில் ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்றிருந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட மற்றும் இணக்கம் ஏற்பட்ட விடயங்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளும், இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

.

Related posts: