பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான சகல மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வருகிறது!
Monday, June 10th, 2019
பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சகல மனுக்களும் அடுத்த மாதம் 12ஆம் திகதி ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த மனுக்களை தேசிய முக்கியத்துவம் மிக்க மனுக்களாக கருத்திற்கொண்டு, அவற்றை நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்ட மா அதிபர் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.
Related posts:
ஜனாதிபதியால் கீரிமலையில் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு!
சிறுவர் தொடர்பான முறைப்பாடுகளில் 40,668 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை - கோப் குழு ...
காடுகளின் அளவை 32 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவிப்பு!
|
|
|


