ஜனாதிபதியால் கீரிமலையில் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு!

Monday, October 31st, 2016

வலி வடக்கு கீரிமலை பிரதேசத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இருப்பவர்களுக்காக முப்படைகளின் பங்களிப்புடன் இந்த 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது.

இதேவேளை, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த தெல்லிப்பழை பிரதேசத்திற்கு உட்பட்ட 454 ஏக்கர் காணி மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. பலாலி இராணுவ முகாமினால் பாதுகாப்பு காரணங்களுக்காக அபகரிக்கப்பட்ட காணிகளே இவ்வாறு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், பலாலி இராணுவ முகாமை அண்டிய பகுதியில் 1927 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருப்பதாக பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இதுவரை வடக்கில் 7185 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 my3

 

 

Related posts: