பொலிஸாருக்கு 750 வாகனங்கள் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி!

Saturday, August 4th, 2018

பொலிஸ் திணைக்களத்துக்கு புதிதாக 750 வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அரச நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்தார்.

அந்த வாகனங்களில் 600 வாகனங்கள் பொலிஸ் திணைக்களத்துக்கு வழங்கப்படவுள்ளன. எஞ்சிய 150 வாகனங்கள் சிறப்பு அதிரடிப்படையினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன் மூலமாகப் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் தங்கள் நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கிலுள்ள பொலிஸ் நிலையங்கள் சிலவற்றில் பொதுமக்கள் முறைப்பாடு செய்தால் பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடங்களுக்குச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு இன்னும் இருந்து வருகிறது. அதற்கு ஒரு காரணம் வாகனங்கள் இன்மையே என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: